×

நாகூர் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பங்கேற்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்காவில் 467வது கந்தூரி விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றுத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (23ம்தேதி) மாலை நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படுகிறது. நாகப்பட்டினம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனகூடு சென்று நாளை (24ம்தேதி) அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் கலந்து கொள்கிரார். ஆளுநருக்கு தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு துவா ஓதப்படுகிறது. இதைத்தொடர்ந்து தர்காவில் ஆளுநர் வழிபாடு நடத்துகிறார்.

The post நாகூர் தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : SANDANAKUDU PROCESSION ,NAGORE TARGA ,GOVERNOR ,R.R. N. Ravi ,Nagapattinam ,467th Ghanduri Festival ,Lord Dharga ,Sandanakudu ,Governor R. N. Ravi ,Dinakaran ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...