×

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சு போட்டி

சென்னை: தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சு போட்டி வருகிற 22ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வடசென்னை அளவில் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியிலும், மத்திய சென்னை அளவில் சேப்பாக்கம் மாநில கல்லூரியிலும், தென்சென்னை அளவில் ராணிமேரி கல்லூரியிலும் என 3 நிலைகளில் காலை 9 மணி அளவில் நடக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம்: 1. காந்தியின் மதநல்லிணக்கம், 2. காந்தியை போல் நான், 3. கப்பலோட்டிய தமிழரும் காந்தியும். காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சு போட்டியில் கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள் விவரம்: 1. அண்ணல் காந்தியடிகளின் உண்ணாநிலை போராட்டங்கள், 2. தமிழர்கள் கண்ட காந்தி 3. காந்தியும் நேருவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சு போட்டி appeared first on Dinakaran.

Tags : Gandhiji birthday speech competition ,Chennai ,Tamil Development Department ,Gandhiji ,Vyasarabadi Dr. Ambedkar Arts College ,North Chennai ,Chepakkam ,
× RELATED அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு...