×

பீக் ஹவர் கட்டணங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கையை ஏற்று பீக் ஹவர் கட்டணங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மின் கட்டணங்களை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கையை ஏற்று, பீக் ஹவர் கட்டணங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். நிறுவனத்தின் மேற்கூரையில் வங்கி கடன் பெற்று சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்வதற்கு மின் வாரியம் யூனிட் ஒன்றுக்கு ரூ.1.53 பைசா கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். முன்பு இருந்ததுபோல் ஒரு கிலோ வாட்டுக்கு 35 ரூபாய் மட்டுமே நிலை கட்டணமாக விதித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையை காப்பற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பீக் ஹவர் கட்டணங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,Tamil Nadu Industrial Power Consumers' Federation ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்