×

கோழி வளர்த்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும் கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

வேலூர், டிச.23: கோழி வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்று வேலூரில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார். வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், விவசாயிகளுக்கு கோழிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு அறிவியல் கால்நடை மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் பாண்டியன் வரவேற்றார். அகில இந்திய கோழி இனப்பெருக்க ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் செல்வன் திட்டங்கள் குறித்து விளக்கினார். விரிவாக்க கல்வி இயக்குனர் அப்பாராவ் பேசினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் பங்கேற்று, 15 விவசாயிகளுக்கு வனராஜா, கிரிராஜா, கிராம பிரியா உள்ளிட்ட வகையான கோழிக்குஞ்சுகள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக அரசு கோழிக்குஞ்சு வளர்ப்போருக்கு பல்வேறு வகையான திட்டங்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஒப்பிடும்போது விவசாய வளர்ச்சி ஒன்று முதல் 1.5 சதவீதம் வரை மட்டுமே உள்ளது. குறிப்பாக கால்நடை வளர்ப்பு 6 சதவீதமாக உள்ளது. கோழி, கோழி முட்டை, இறைச்சி 8 சதவீதமாக உள்ளது. கோழி வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு உயர்கிறது. இதன்மூலம் வாழ்க்கை தரமும் உயர்ந்து வருகிறது. சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான திட்டங்கள் இருந்தால் அதன்மூலம் கடனுதவி சுயதொழில் தொடங்க வங்கிகள் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post கோழி வளர்த்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும் கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Veterinary University ,Vellore ,Tamil Nadu Veterinary Medical Science University ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...