×

பொன்னை அருகே கடும் பனிப்பொழிவு: சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி

பொன்னை, டிச.23: பொன்னை, வள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்த நிலையில், தற்போது கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. அதன் காரணமாக நேற்று காலை பொன்னை, வள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடும் பனிப்பொழிவு நிலவி, வானம் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீசியது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்களில் சென்றவர்கள் முன் செல்லும் வாகனங்கள் தெரியாமல் அவதிக்குள்ளாகினர். மேலும் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்களை இயக்கினார்கள். தொடர்ந்து, காலை 9 மணி வரை கடும் பணிப்பொழிவு பெய்ததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

The post பொன்னை அருகே கடும் பனிப்பொழிவு: சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Ponnai ,Vallimalai ,Dinakaran ,
× RELATED 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள்...