×

ரெட் புக் என்ற பெயரில் அதிகாரிகளுக்கு மிரட்டல்; சந்திரபாபுநாயுடுவின் மகனை கைது செய்ய அனுமதிக்க வேண்டும்: லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் மனு

திருமலை: ரெட் புக் என்ற பெயரில் அதிகாரிகளை மிரட்டும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் மகன் லோகேஷை கைது செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் மனு அளித்தனர்.  ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளார். அவரது மகன் லோகேஷ் மீதும் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், லோகேஷை கைது செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆந்திர சிஐடி போலீசார் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் அவுட்டர் ரிங் சாலை வழக்கில் லோகேஷ் 14வது குற்றவாளியாக உள்ளார். இந்நிலையில் விசாரணை அதிகாரிகள் பெயர்களை சிவப்பு புத்தகத்தில் பதிவு செய்துள்ளதாகவும் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அவர்களை கவனித்து கொள்வேன் என்று லோகேஷ் மிரட்டியுள்ளார். சாட்சிகளை மிரட்டி வழக்கின் விசாரணையை திசை திருப்புவதே லோகேஷின் நோக்கம். எனவே லோகேஷை கைது செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

The post ரெட் புக் என்ற பெயரில் அதிகாரிகளுக்கு மிரட்டல்; சந்திரபாபுநாயுடுவின் மகனை கைது செய்ய அனுமதிக்க வேண்டும்: லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் மனு appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,CIT ,Tirumala ,Lokesh ,Chief Minister ,Chandrababu ,
× RELATED ஜெகன்மோகனா? சந்திரபாபுநாயுடுவா?...