×

விஜய் படத்தின் தலைப்பு என்ன: தயாரிப்பாளர் விளக்கம்

சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதுவரை நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்காத பல முன்னணி நடிகர்களை இந்த படத்தில் வெங்கட் பிரபு களம் இறக்கி உள்ளார். பிரசாந்த் விஜய்யின் சமகால நடிகர். அவர் இதில் முதல்முறையாக விஜய்யுடன் இணைகிறார். மேலும், வெள்ளி விழா நாயகன் மோகன், பிரபுதேவா, நடிகைகள் சினேகா, லைலா மற்றும் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

விஜய் 68 படத்திற்கு பாஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு சில நெட்டிசன்கள் கொளுத்திப் போட்ட நிலையில், சிலர் Puzzle தான் டைட்டில் என்றும் தகவல் கூற ஆரம்பித்தனர். இந்நிலையில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, அந்த இரு டைட்டில்களும் இல்லை என்றும் அதை விட ஃபயரான ஒரு டைட்டில் தான் வெங்கட் பிரபு வைக்க உள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது, ‘நிறைய தகவல்கள் பரவுகிறது. அதில் எதுவும் உண்மை கிடையாது. சிறப்பான தலைப்பை சீக்கிரமே வெங்கட் பிரபு அறிவிப்பார்’ என்றார்.

The post விஜய் படத்தின் தலைப்பு என்ன: தயாரிப்பாளர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Chennai ,AGS ,Venkat Prabhu ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்