×

தொழிலாளி வீட்டிற்கு கிறிஸ்துமஸ் தாத்தாவாக சென்று `சர்ப்ரைஸ்’ கொடுத்த ரோஜா

திருமலை: காலணி தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்று அமைச்சர் ரோஜா சர்ப்ரைஸ் கொடுத்தார். ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரான நடிகை ரோஜா, வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது நகரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்லேநித்ரா என்ற பயணம் மேற்கொண்டு வருகிறார். அதாவது கிராமங்களுக்கு மாலையில் சென்று பொதுமக்களுக்கு தேவையான தேவைகள் குறித்து கேட்டறிந்து அன்றிரவு அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டு இரவு தங்கி வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் பிறந்த நாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் அமைச்சர் ரோஜா கொண்டாடி வருகிறார். அதன்படி நேற்று விஜயவாடாவில் வசித்து வரும் காலணிகள் விற்கும் தொழிலாளியின் வீட்டுக்கு திடீரென சென்றார். அந்த தொழிலாளி தனது 2 மகள்களுடன் வசிக்கிறார். அவர்களுக்கு போதிய வருவாய் இல்லை. அவர்களது குடும்பம் வறுமையில் வாடி வருவதை அறிந்து அங்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டார். அதன்படி நேற்று கிறிஸ்துமஸ் வேடமணிந்து அமைச்சர் ரோஜா திடீரென சென்றார்.

போலீசார் மற்றும் பாதுகாவலர்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வருவதை அறிந்து அந்த தொழிலாளி குடும்பத்தினர் குழம்பினர். அதன்பின்னர் அமைச்சர் ரோஜா வருவதை அறிந்து உற்சாகமடைந்தனர். இதையடுத்து அந்த குடும்பத்தாருக்கு இனிப்பு, கேக் மற்றும் புத்தாடைகளை ரோஜா வழங்கினார். மேலும் தொழிலாளியின் மனைவிக்கு மாதந்தோறும் ₹3 ஆயிரம் பென்ஷன் தர அதே இடத்தில் உத்தரவிட்டார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து அமைச்சர் ரோஜா வந்ததை அறிந்து கிராம மக்கள் திரண்டனர்.

`வதந்திகள் வாழ வைக்காது’
பின்னர் அமைச்சர் ரோஜா கூறுகையில், என்னை அணுகுபவர்களுக்கு பலதரப்பட்ட உதவிகள் செய்து வருகிறேன். இவற்றை என் மன திருப்திக்கு செய்கிறேன். என்னை பற்றி பலர் பலவிதமான வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தினால் வாழ முடியாது. வதந்திகள் எல்லாம் நம்மை வாழ வைக்காது. இவ்வாறு கூறினார்.

The post தொழிலாளி வீட்டிற்கு கிறிஸ்துமஸ் தாத்தாவாக சென்று `சர்ப்ரைஸ்’ கொடுத்த ரோஜா appeared first on Dinakaran.

Tags : Santa Claus ,Tirumala ,Minister ,Roja ,Andhra State ,Santa ,
× RELATED சொந்த கட்சியிலே கடும் எதிர்ப்பு:...