×

ஜூசில் மது கலந்து கொடுத்து மயக்கி நர்ஸ் பலாத்காரம்: காதலியுடன் வாலிபர் கைது


திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கோவளத்தில் ஓட்டலில் வைத்து ஜூசில் மது கலந்து கொடுத்து மயக்கி நர்ஸ் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் வாலிபரும், அவருக்கு உடந்தையாக இருந்த காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஈஸ்வரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரத் (28). திருவனந்தபுரம் கோவளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தெராபிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். அவரது காதலி சூர்யா (33). பாலக்காடு அருகே உள்ள மண்ணார்க்காடு பகுதியை சேர்ந்த இவர், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.

இதே மருத்துவமனையில் எர்ணாகுளம் இடதலை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரிடம் சூர்யா திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்து உள்ளார். பின்னர் அவரை சூர்யா கோவளத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். ஓட்டலுக்கு வந்த சரத்தும், சூர்யாவும் சேர்ந்து அவருக்கு ஜூசில் மது கலந்து கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து உள்ளனர். இதனால் மயக்கம் அடைந்த நர்சை சரத் பலாத்காரம் செய்து இருக்கிறார். அதை சூர்யா செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

அதன் பிறகு அவரை சூர்யா எர்ணாகுளத்தில் கொண்டு சென்று விட்டுள்ளார். இதுகுறித்து பலாத்காரம் செய்யப்பட்ட நர்ஸ் இடதலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்தையும், சூர்யாவையும் கைது செய்தனர். தொடர்ந்து 2 பேரிடமும் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜூசில் மது கலந்து கொடுத்து மயக்கி நர்ஸ் பலாத்காரம்: காதலியுடன் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kowal ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்