×

நடிகர் மன்சூர் அலிகான் மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்..!!

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி கோரி மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்திருந்தார். மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் கூறிய கருத்தை அவதூறாக கருத முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு என்றும் நீதிபதி கூறியுள்ளார். நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கிலும் விளம்பர நோக்கத்துக்காகவும் தொடரப்பட்டுள்ளதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post நடிகர் மன்சூர் அலிகான் மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : High Court ,Mansoor Ali Khan ,CHENNAI ,Trisha ,Khushbu ,Dinakaran ,
× RELATED வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டி...