×

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு வட்சதீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்
அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் அன்று (டிச.25) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Weatherman ,Pradeep John ,Chennai ,Puducherry ,Karaikal ,Chennai Meteorological Survey ,
× RELATED மே 1 முதல் 4 வரை வெயில் உச்சத்தை தொட...