×

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.ரூ.46,880-க்கு விற்பனை செய்யபடுகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. பெண்களுக்கு மட்டுமே பிடிக்கும் தங்கம் தற்போது ஆண்களுக்கு அதிகம் பிடிக்க துவங்கியுள்ளது, இதேபோல் பெண்களும் தங்கத்தை நகையாக வாங்காமல் தங்க காயின் மற்றும் பார்களாக வாங்குவது அதிகரித்துள்ளது. இது ஒருப்பக்கம் முதலீடாக இருந்தாலும் திருமணத்தின் போது லேட்டஸ்ட் டிசைனில் நகை வாங்க இந்த யுக்தி பயன்படுவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,860-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.81க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து கிராம் ரூ.5,825க்கும், ஒரு சவரன் ரூ.46,600க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.280 ரூபாய் அதிகரித்துள்ளது.

 

 

 

 

The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Carrot ,Chennai ,22 Carrot Ornament Shop ,Dinakaran ,
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...