×

தாராபுரம் அருகே அரவை இயந்திரத்தில் சிக்கி டிரைவர் பலி

 

தாராபுரம், டிச.22: தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே மக்காச்சோளத்தட்டு அரவை செய்யும் இயந்திரத்தில் சிக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகேயுள்ள ஊத்தான்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பேச்சிக்குட்டி (24). இவர் தனியாருக்‌கு சொந்தமான மக்காச்சோளத்தட்டு அரவை செய்யும் டிராக்டருடன் கூடிய இயந்திர டிரைவராக வேலை செய்து வந்‌தார்.

நேற்று குண்டடம் அடுத்துள்ள வேங்கிபாளையத்தில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மக்காச்சோளத்தட்டு அரவை பணியில் ஈடுபட்‌டிருந்தார்.
அப்போது இயந்திரத்தில் சோளத்தட்டுகள் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. சிக்கிய தட்டை டிரைவர் பேச்சிக்குட்டி எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கை இயந்திரத்தில் சிக்கி அவரை உள்ளே இழுத்துவிட்டது. இதில் பலத்த காயமடைந்த பேச்சிக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றிய புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தாராபுரம் அருகே அரவை இயந்திரத்தில் சிக்கி டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Kundadam ,Dinakaran ,
× RELATED காதலனுடன் தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன்