×

கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டி

 

கோவை, டிச.21: பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தொடர் ஓட்டம், தடை தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மூம்முறை தாண்டுதல், 100மீ, 200மீ, 400மீ, 800 மீ மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டபந்தயம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

இதில் மாணவியருக்கான 10 ஆயிரம் மீ தொடர் ஓட்டத்தில் கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவி திவ்யா முதலிடம் பிடித்தார். பிஎஸ்ஜிஆர் கிரிஷ்ணம்மால் கல்லூரி மாணவி லித்தன்யா ஸ்ரீ இரண்டாம் இடமும், டாக்டர் என்.ஜி.பி கல்லூரி மாணவி ஷாம ஷெரின் மூன்றாம் இடமும் பிடித்தனர். குண்டு எறிதல் போட்டியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவி ஸ்ரீநிதி முதலிடமும், அதே கல்லூரியை சேர்ந்த தீபா இரண்டாம் இடமும், ஈரோடு வெள்ளாலர் கல்லூரி மாணவி புவணேஷ்வரி மூன்றாம் இடமும் பிடித்தனர்.

100 மீ தடை தாண்டுதலில் ஸ்ரீ ஜிவிஜி கல்லூரி மாணவி வைசாலி முதலிடமும், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள் இலக்கியா இரண்டாம் இடமும், பத்ம பாரதி மூன்றாம் இடமும் பிடித்தனர். மாணவர்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் தொடர் ஓட்டத்தில் எஸ்டிசி கல்லூரி மாணவர் மாரி சரத் முதலிடமும், பிஎஸ்ஜி கல்லூரி மாணவர் ஹரிஷ் இரண்டாமிடமும், டாக்டர் என்ஜிபி கல்லூரி மாணவர் ஸ்ரீனிகேஷ் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

வட்டு எறிதல் போட்டியில் பிஎஸ்ஜி கல்லூரி மாணவர் விஷ்வா முதலிடமும், டாக்டர் என்ஜிபி கல்லூரி மாணவர்க்அள் கோகுல் இரண்டாம் இடமும், பரணிதரன் மூன்றாம் இடமும் பிடித்தனர். போல் வால்ட் போட்டியில் டாக்டர் என்ஜிபி கல்லூரி மாணவர் பாலன் முதலிடமும், உடுமலை ஜிஏசி கல்லூரி மாணவர் திருபாகரன் இரண்டாம் இடமும், பிபிஜி கல்லூரி மாணவர் குணாநிதி மூன்றாம் இடமும் பிடித்தனர்.

The post கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Bharatiyar University ,Nehru Stadium, Coimbatore ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...