×

அரியலூர் அடுத்த அஸ்தினாபுரத்தில் தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து கூட்டம்

அரியலூர்,டிச.22: அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஒரு நாள் வாழ்வியலுக்கான சுற்றுச்சூழல் குறித்து கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பள்ளி கல்வித் துறை சார்பில் நடைபெற்ற இந்த பணிமனையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்து தலைமையுரையாற்றினார். மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணன், சோழமாதேவி தேசிய வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி கௌதீஷ், முதல்வரின் சிறப்புத் திட்டத்தின் பசுமை தோளர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புறையாற்றினர். துணிப்பை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளகள் இளவரசன், ஜீவராமன், ராஜேந்திரன், சோலைகண்ணு, ராசேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

முன்னதாக தலைமையாசிரியர் வேல்முருகன் வரவேற்றார். முடிவில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குணபாலினி செய்திருந்தார். இந்த பணிமனையில் அரியலூர் வருவாய் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 25 தேசிய பசுமை படை ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 175 மாணவர்கள் என மொத்தம் 200 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், விதைப்பந்து தயாரித்தல், கழிவு மேலாண்மை, துணிப்பை மற்றும் காகித பைகள் தயாரித்தல், மிஷன் இயற்கை திட்டம் மற்றும் மரம் நடுதலின் முக்கியத்துவம் போன்றவைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

The post அரியலூர் அடுத்த அஸ்தினாபுரத்தில் தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து கூட்டம் appeared first on Dinakaran.

Tags : National Green Force ,Astinapuram ,Ariyalur ,Government ,Model High School ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...