×

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.58 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு, கோனா எலிவேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.58 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு, கோனே எலிவேட்டர்ஸ் மற்றும் எஸ்கலேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.58 லட்சம் மதிப்பிலான எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கான அதிநவீன உபகரணங்கள், ரத்ததான சாய்வு நாற்காலி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் கோபிநாத் தலைமை வகித்து, கோனா எலிவேட்டர்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் செல்லப்பா பத்ரிநாத், மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன் ஆகியோரிடமிருந்து ரூ.58 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், யுனைடெட் வே ஆப் சென்னை தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மீனாட்சி ரமேஷ், மூத்த மருத்துவர் கிருஷ்ணகுமாரி, நிர்வாக அலுவலர் முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் கவிதா ராணி அனைவரையும் வரவேற்று பேசினார். மூத்த செவிலியர் இந்திரா நன்றி கூறினார். ஏற்பாடுகளை யுனைடெட் வே ஆப் சென்னை தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.58 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Government General Hospital ,Kanchipuram ,Kona Elevators ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...