×

வாசியம்மன் கோயில் மகா உற்சவம்

உத்திரமேரூர், ஜூன் 8: உத்திரமேரூர் அருகே நீரடி கிராமத்தில்  வாசியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், 44ம் ஆண்டு மகா உற்சவ திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி, வாசியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை காண்பிக்கப்பட்டது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இரவு வாசியம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

The post வாசியம்மன் கோயில் மகா உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Vasiyamman Temple ,Maha Utsavam ,Uthramerur ,Neeradi village ,Maha Utsava festival ,Vasiyamman ,Amman ,Vasiyamman Koil Maha Utsavam ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை