×

பெருமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்: நாசர் எம்எல்ஏ அனுப்பி வைத்தார்

ஆவடி: தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் பெரும் மழை காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண பொருட்களை சா.மு.நாசர் எம்எல்ஏ கொடியசைத்து அனுப்பி வைத்தார். தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் பெரும் மழை காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு செய்தியாளர்கள் மற்றும் ஆவடி வணிகர் சங்கம் இணைந்து நிவாரண பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் 500 அரிசி மூட்டைகள், 1000 பேருக்கான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள், 1000 போர்வைகள், புடவை, லுங்கி என 15 லட்சம் மதிப்பிட்டிலான நிவாரண பொருட்கள் தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த. இந்த நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட மினி லாரி வாகனத்தில் நேற்று மாலை கொடியசைத்து ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர் அனுப்பி வைத்தார்.

இதற்கு முன்னதாக, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிவாரண பொருட்களை பார்வையிட்டவர், நிவாரண பொருட்கள் முறையாக கொண்டு போய் சேர்க்கவும் உத்தரவிட்டார். உடன், 41வது வார்டு மாமன்ற உறுப்பினர் சத்தியா கோ ரவி, ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆவடி மேயர் ஜி. உதயகுமார், அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல கலந்து கொண்டனர்.

The post பெருமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்: நாசர் எம்எல்ஏ அனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : southern ,Nasser MLA ,Aavadi ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...