×

ரூ.2.6 கோடி கடன் வாங்கி மோசடி தனியார் நிறுவன நிர்வாகிகள் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னையில் 149 ஊழியர்களின் கணக்குகளை காட்டி ரூ.2.6 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தனியார் நிறுவன நிர்வாகிகள் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் செந்தில் குமார் அவரது கூட்டாளிகள் காளிதாசன், தஞ்சன் ஆகியோர் அண்ணா சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் 149 ஊழியர்களின் சம்பள சான்றிதழ்கள், அடையாள அட்டைகளை காண்பித்து ரூ.2 கோடியே 6 லட்சத்து 87 ஆயிரம் முறைகேடாக கடன் வாங்கியுள்ளனர். இந்த கடன் தொகையை திரும்பி செலுத்தவில்லை. இதையடுத்து வங்கிக்கு ரூ.2 கோடியே 6 லட்சத்து 87 ஆயிரம் இழப்பு ஏற்பட்டதாக பேங்க் ஆப் இந்தியா புகார் அளித்தது.

அதன்அடிப்படையில் செந்தில்குமார், காளிதாசன், தஞ்சன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குபதிவு செய்து 2009 செப்டம்பர் 30ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்னை, சிபிஐ வழக்குகளுக்கான கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து செந்தில்குமார், காளிதாசன், தஞ்சன் ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தமாக ரூ.2 கோடியே 10 லட்சத்து 62 ஆயிரம் அபராதம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

The post ரூ.2.6 கோடி கடன் வாங்கி மோசடி தனியார் நிறுவன நிர்வாகிகள் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Court ,
× RELATED செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய...