×

காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் இலக்கிய கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலைத் தமிழாய்வுத் துறை, காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை கருத்தரங்கம் நேற்று முன்தினம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழ்த் துறை தலைவர் வீரராகவன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கி கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.

இதனையடுத்து ‘‘செம்மொழித் தமிழின் சிறப்பு” எனும் தலைப்பில் சு.சதாசிவம், ‘‘மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்” எனும் தலைப்பில் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், ‘‘நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்” எனும் தலைப்பில் விமலா அண்ணாத்துரை, ‘‘புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்” எனும் தலைப்பில் நெல்லை ஜெயந்தா, ‘‘கண்களைத் திறந்த கதை உலகம்’’ எனும் தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணன், ‘‘அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும் தலைவர்களும்’’ எனும் தலைப்பில் விஜயகுமார் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினர்.

முடிவில் கல்வி நிலைய தாளாளர் அமுதா பாலகிருஷ்ணன், பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழும், பரிசும் வழங்கினார். இந்த இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறையில் சங்கரா கல்லூரி, எஸ்எஸ்கேவி மகளிர் கல்லூரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

The post காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் இலக்கிய கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Literary ,Kanji Srikrishna College ,Kanchipuram ,Kanchi Srikrishna College ,Kanchi ,Keezhampi ,Seminar ,Dinakaran ,
× RELATED காஞ்சி இலக்கிய வட்ட கூட்டம்