×

மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடிய பெண் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் சிவசேகரின் தாயார் பெருமாவிடம் உறவினர் போல பேசி ஆப்பிள் பழங்களை கொடுத்துள்ளார் மைதிலி.மூதாட்டி ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் பீரோவில் இருந்த 20 சவரன் நகைகளை திருடியுள்ளார்.பணி முடிந்து வீட்டுக்கு வந்த ஆசிரியர் சிவசேகர், பீரோவில் இருந்த நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.ஆசிரியர் சிவசேகர் அளித்த புகாரில் சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு மைதிலி என்பவரை கைது செய்தது போலீஸ்.

The post மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Paparapatti ,Dharmapuri district ,
× RELATED மதுபோதையில் தகராறு செய்த கணவனை...