×

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளத்தில் சிக்கிய 500க்கும் மேற்பட்டோரை மீட்ட திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ்; குவியும் பாராட்டு..!!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமங்களில் வெள்ளம் வடியாத நிலையில், அங்கு சிக்கி இருந்த 500க்கும் மேற்பட்டோரை திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜின் குழுவினர் மீட்டனர். கனமழையால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம் பகுதி 2 நாட்களாக வெளியே இருப்பவர்கள் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்தது. சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், பெரும்பாலான சாலைகள் உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது.

அந்த பகுதிக்கு அருகே உள்ள கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே புளியங்குளம் கிராமத்தில் சிக்கிய பொதுமக்களை திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் தனது குழுவுடன் சென்று மீட்டார். மண்கலங்குறிச்சி, பெருங்குளம், ஆலடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களையும் படகு மூலம் அவர்கள் மீட்டுள்ளனர். தமது சொந்த ஊரில் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

The post ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளத்தில் சிக்கிய 500க்கும் மேற்பட்டோரை மீட்ட திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ்; குவியும் பாராட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Mari Selvaraj ,Srivaikundam ,Thoothukudi ,
× RELATED புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு