×

சென்னை எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் கசிந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி நிறைவு: சுப்ரியா சாகு தகவல்

சென்னை: சென்னை எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் கசிந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி நிறைவு பெற்றுவிட்டதாக அப்பகுதியில் ஆய்வு நடத்திய சுற்றுசூழல் துறை தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் கொட்டிய பலத்த மழையின் போது கச்சா எண்ணெய் கழிவுகள் மழை நீருடன் கலந்து பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்று பகுதியில் படிந்தது. சுமார் 20 கி.மீ. சுற்றளவுக்கு படிந்த எண்ணெய் படத்தை அகற்றும் பணி கடந்த ஒரு வாரத்திற்க்கும் மேலாக நடைபெற்று வந்தது.

இது குறித்து மாசு கட்டுபாட்டு வாரியம், மீன்வளத்துறை, வனத்துறை, CPCl ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் சுற்றுசூழல், காலநிலை மாற்றம் துறை தலைமை செயலாளர் சுப்ரிய சாகு படகில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; எண்ணெய் அகற்றும் பணி நிறைவு பெற்றுள்ளது. அலையாத்தி காடு பகுதியில் எண்ணெய் படலத்தை சுத்தப்படுத்துவதற்கான பணி நாளை தொடங்கும் என்றார்.

பின்னர் நெட்டுகுப்பன் பகுதியில் எண்ணெய் கசிவு மேலாண்மை ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சுப்ரியா சாகு தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆற்றில் மீன் பிரிக்கும் விதமாக சுத்தபடுத்தி தரவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மீனவர்கள் முன்வைத்தனர். அதே சமயம் ஆற்றில் எண்ணெய் படலம் 10% மட்டுமே அகற்றியிருப்பதாகவும், 90% அப்படியே தேங்கி இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

The post சென்னை எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் கசிந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி நிறைவு: சுப்ரியா சாகு தகவல் appeared first on Dinakaran.

Tags : Kosastala River ,Toltur, Chennai ,Supriya ,Chaku ,Chennai ,Kosastalle River ,Tolur ,Toloor, Chennai ,Supriya Chaku ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சியில் விவசாயிகள் நிலைமை...