×

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக செல்லக்கூடிய பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது: திருச்செந்தூர் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் நிறுத்தம்

தூத்துக்குடி: 4 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்ந்து திருநெல்வேலி, மதுரை வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டுவருகிறது. தூத்துக்குடியில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதுமாக முடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரையில் தூத்துகுடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தன்குளம், காயல்பட்டினம் பகுதிகள் தனி தனி தீவாக காட்சியளித்தது. பல்வேறு இடங்களில் காட்டாற்று வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிக்கபட்டது. இதன் காரணமாக தரைவழி போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டிருந்தது.

இந்த நிலையில் சாலைகள் உடைப்பை சரிசெய்வது, தற்காலிக பாலம் அமைப்பது போன்ற பணிகள் மும்மரமாக நடைபெற்றது. இதனை அடுத்து இன்று முழுமையாக தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, மதுரை மார்க்கமாக செல்ல கூடிய அணைத்து பேருந்துகளும் இன்று காலை முதல் இயக்கபட்டு வருகிறது. இருப்பினும் திருச்செந்தூர் மார்க்கமாக இயக்க கூடிய பேருந்துகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்ல கூடிய வழியில் ஆத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தால் சாலை முற்றிலுமாம சேதமடைந்ததுள்ளது. அதனல் அந்த பகுதிகளுக்கு மீட்பு குழுவினரால் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால் இந்த பகுதிகளுக்கு முற்றிலுமாக பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.

The post தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக செல்லக்கூடிய பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது: திருச்செந்தூர் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Tutickudi ,bus station ,Tirunelveli, Madurai ,Trichindur ,Thoothukudi ,Irundu Tirunelveli ,Madurai ,Thoothukudi Bus Station ,Tuticorin Bus Station ,Tricendoor ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை...