×

தூக்கு போட்டு பள்ளி மாணவி தற்கொலை

வருசநாடு, டிச. 21: கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் நந்தனா (11) கடமலைக்குண்டு அரசு மேல்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை நந்தனா வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பினார். அப்போது வேலைக்கு கிளம்பிய தந்தையிம் பைக்கில் தன்னை பள்ளியில் விடுமாறு மகள் கேட்டுள்ளார். அதற்கு அவர் நடந்து செல்லுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் பெற்றோர் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ரிப்பனில் தூக்கு போட்டு நந்தனா சடலமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் நந்தனாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமி தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தூக்கு போட்டு பள்ளி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Velmurugan ,Melapatti ,Kadamalaikundu ,Nandana ,Kadamalaikundu Govt ,Dinakaran ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்