×

சோழிங்கநல்லூர் -சிப்காட் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நடைமேடை தடுப்பு கதவு அமைக்க ₹159 கோடிக்கு ஒப்பந்தம்: நிர்வாகம் தகவல்

சென்னை, டிச.21: மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட திட்டத்தில் சோழிங்கநல்லூர் முதல் -சிப்காட் வழித்தடத்தில் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்க ரூ.159.97 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட 3வது வழித்தடத்தில் சோழிங்கநல்லூர் ஏரி முதல் சிப்காட் -2 வரை மற்றும் 5வது வழித்தடத்தில் கோயம்பேடு மொத்த சந்தை வளாகம் மெட்ரோ முதல் எல்காட் வரை ஆகிய இரண்டு உயர்மட்ட வழித்தடங்களில் அமையவுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு நடைமேடை தடுப்பு கதவுகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் ரூ.159.97 கோடி மதிப்பில் எஸ்டி இன்ஜினியரிங் அர்பன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

3வது வழித்தடம் மற்றும் 5வது வழித்தடம் அமையவுள்ள 36 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதி உயரத்திலான நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கும் பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். உயர்மட்ட வழித்தடங்களில் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைப்பதால் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கங்களை இந்த அமைப்பு எளிதாக்கும். மேலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் அர்பன் சொல்யூஷன்ஸ் நிறுவன துணைத் தலைவர் ராமசாமி முத்துராமன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

The post சோழிங்கநல்லூர் -சிப்காட் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நடைமேடை தடுப்பு கதவு அமைக்க ₹159 கோடிக்கு ஒப்பந்தம்: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Choshinganallur ,Shipkot ,Chennai ,Cholinganallur ,Metro Rail ,Dinakaran ,
× RELATED அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்...