×

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு காலஅட்டவணை வெளியீடு: குரூப் 4 உள்பட 19 தேர்வுகளுக்கு அறிவிப்புகள்

சென்னை: 2024ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான திட்ட அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட 19 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஓராண்டில் என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்பன உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், 2024ம் ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணை டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால், அன்றைய தினம் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், 2024ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டவணையை டி.என்.பி.எஸ்.சி நேற்று மாலை தனது இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது. இதில், குரூப் 1, குரூப்-2, குரூப்-4 உள்பட 19 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. முதலில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படுகிறது.

இதற்கான போட்டித்தேர்வு ஜுன் மாதம் நடைபெற உள்ளது. காலியிடங்கள் எத்தனை என்ற விவரம் கொடுக்கப்படவில்லை. வன காப்பாளர் தேர்வுக்கான (1,264 காலியிடங்கள்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு ஜுன் மாதம் நடத்தப்பட உள்ளது. குரூப்-1 தேர்வுக்கான (65 காலியிடம்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதத்தில் முதல்நிலைத்தேர்வு நடைபெறுகிறது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான (1,294 காலியிடம்) அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. அதற்கான முதல்நிலைத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள்/தேர்வுகள் காலிப்
பணியிடங்கள் தேர்வு குறித்து
அறிவிப்பு வௌியாகும் மாதம் தேர்வுகள்
நடைபெறும் மாதம்
ஒருங்கிணைந்த குடிமையில் பணி தேர்வு – ஜனவரி ஜூன்
சமூக நலத்துறாயில் உதவி இயக்குநர் 2 பிப்ரவரி மே
தமிழ்நாடு சட்ட சபை ஆங்கில நிருபர் பணி 6 பிப்ரவரி மே
வனத்துறை வனக்காவலர் பணி 1,264 மார்ச் ஜூன்
ஒருங்கிணைந்த குடிமை பணி குரூப் 1 65 மார்ச் ஜூலை
ஒருங்கிணைந்த பொறியாளர் துணை பணி 467 ஏப்ரல் ஜூலை
ஒருங்கிணைந்த சட்டப்பணிகள் தேர்வு 25 ஏப்ரல் ஜூலை
வனத்துறை வன அதிகாரி 118 மே ஆகஸ்ட்
ஒருங்கிணைந்த புவியியல்
துணைப் பணிகள் தேர்வு 5 மே ஆகஸ்ட்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
தேர்வு குரூப் 2 1,294 மே ஆகஸ்ட்
ஒருங்கிணைந்த அறிவியல் பணிகள் தேர்வு 96 ஜூன் செப்டம்பர்
ஒருங்கிணைந்த புள்ளியியல்
துணைப் பணிகள் தேர்வு 23 ஜூன் செப்டம்பர்
ஒருங்கிணைந்த உடற்கல்வி பணிகள் தேர்வு 12 ஜூலை அக்டோபர்
ஒருங்கிணைந்த இளநிலை ஆராய்ச்சி
துணைப் பணிகள் தேர்வு 1 ஜூலை அக்டோபர்
தொல்லியல் அதிகாரி மற்றும் உதவி
தொல்லியல் அதிகாரி பணித்தேர்வு 14 ஜூலை அக்டோபர்
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள்
உரிமையியல் நீதிபதி தேர்வு – ஆகஸ்ட் நவம்பர்
ஒருங்கிணைந்த கணக்குப் பணிகள் தேர்வு – ஆகஸ்ட் நவம்பர்
ஒருங்கிணைந்த நூலகப் பணிகள் தேர்வு – ஆகஸ்ட் நவம்பர்
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு 47 செப்டம்பர் ஜனவரி (2025)

The post டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு காலஅட்டவணை வெளியீடு: குரூப் 4 உள்பட 19 தேர்வுகளுக்கு அறிவிப்புகள் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆட்சியர்கள் ஆஜராக ஐகோர்ட் ஆணை