×

வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கான பொது ஒப்புதலை 10 மாநிலங்கள் திரும்ப பெற்றன: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: மாநிலங்களில் நடக்கும் சில முக்கிய குற்ற சம்பவங்கள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு தங்கள் அதிகார வரம்பில் விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக அந்தந்த மாநிலங்கள் பொதுஒப்புதலை அளிக்க வேண்டும்.  இந்நிலையில் 10 மாநிலங்கள் வழக்குகளை விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்புக்கு வழங்கிய ஒப்புதலை திரும்ப பெற்றுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் நேற்று ஒன்றிய பணியாளர்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், “தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்குவங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேகாலயா, மிசோரம், பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலங்களின் குற்ற வழக்குகளை விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்புக்கு வழங்கிய பொதுஒப்புதலை திரும்ப பெற்றுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

The post வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கான பொது ஒப்புதலை 10 மாநிலங்கள் திரும்ப பெற்றன: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : CBI ,Union Govt. New ,Delhi ,Central Bureau of Investigation ,Union government ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...