×

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ20,000 நிவாரண உதவிதொகை: என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுவிட்டது. கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தென்மாவட்ட மக்கள் உள்ளனர். பழையநிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் 5 ஆண்டு வரை ஆகும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடும்ப அட்டைகள் மூலம் தலா 20 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கிடவேண்டும். குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஏரிகள், குளங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மூழ்கிவிட்டன. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் ஏக்கருக்கு குறைந்தபட்சம் ₹25 ஆயிரம் வழங்கவேண்டும். கால்நடைகளை கணக்கீடு செய்து இழப்பீடு தொகையை அரசு வழங்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ20,000 நிவாரண உதவிதொகை: என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Thoothukudi ,Tenkasi ,NR Thanapalan ,Chennai ,Perundhalaivar Makkal Party ,
× RELATED நெல்லையில் பிரதமர் மோடி இன்று பரப்புரை