×

தஞ்சை அருகே ஊராட்சி அலுவலகத்தில் பெண் செயலாளர் தற்கொலை


கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் காவனூரை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் ஜெயலட்சுமி (25). கடந்த 2 ஆண்டுகளாக திருப்பனந்தாள் ஒன்றியம் கீழசூரியமூலை ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று, 100 நாள் வேலை தொடர்பாக திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் ரமேஷ் ஆய்வு பணிக்கு வந்துள்ளார். அப்போது ஊராட்சி அலுவலகம் பூட்டி இருந்துள்ளது. உடனே அவர் போட்டோ எடுத்து ஊராட்சி அலுவலக வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் அலுவலகம் வந்த ஜெயலட்சுமி தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊராட்சி தலைவர் உஷா கொடுத்த தகவலின் பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் பந்தநல்லூர் போலீசார் வந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயலட்சுமி தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தஞ்சை அருகே ஊராட்சி அலுவலகத்தில் பெண் செயலாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thyagarajan ,Bandanallur ,Cavanur ,Thiruvidaimarudur ,Thanjavur district ,Jayalakshmi ,Panchayat ,
× RELATED நடுரோட்டில் பைக்கை நிறுத்தி...