×

நாகர்கோவில் – கன்னியாகுமரி விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

குமரி: நாகர்கோவில் – கன்னியாகுமரி விரைவு ரயில் (06643) இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* நாகர்கோவில் -நெல்லை இடையே இன்று இயக்கப்படும் விரைவு ரயில் (06641) இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

* கன்னியாகுமரி – புனலூர் விரைவு ரயில் இன்று பிற்பகல் நாகர்கோவிலில் இருந்து புறப்படும்.

* புனலூர் ரயில் (06640) நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 3.32 மணிக்கு புறப்படும்.

* பாலக்காடு திருச்செந்தூர் விரைவு ரயில் இன்று நெல்லை வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.

* திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் பிற்பகல் 1.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் என அறிவிப்பு

அரக்கோணம் – கடப்பா விரைவு ரயில் ரத்து:

* தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக அரக்கோணம் – கடப்பா விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டது.

* மறுமார்க்கத்தில் கடப்பாவில் இருந்து அரக்கோணத்துக்கு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து:

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்டம் ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் மலை ரயில் தண்டவாளத்தில் மண், பாறைகள் சரிந்து விழுந்தன. மண், பாறைகள் சரிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரயில் பாதியிலேயே திரும்பியது.

The post நாகர்கோவில் – கன்னியாகுமரி விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kanyakumari ,Southern Railway ,Kumari ,Kanyakumari Express ,Nagercoil… ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி அருகே தீ விபத்து;...