×

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம் சிவகாசி-எம்.புதுப்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

சிவகாசி, டிச. 20: சாலையில் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம் காரணமாக சிவகாசி-எம்.புதுப்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சிவகாசி பகுதியில் கடந்த 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சிவகாசி அருகே வெள்ளையாபுரம், கட்டசின்னாம்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, எம்.புதுப்பட்டி சாலைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சிவகாசி-எம்.புதுப்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

எம்.புதுப்பட்டி செல்லும் வாகனங்கள் செங்கமலநாச்சியார்புரம் மற்றும் நமஸ்கரித்தான்பட்டியில் தடுத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோன்று எம்.புதுப்பட்டியில் இருந்து வந்த வாகனங்கள் சுக்ரவார்பட்டி, அதிவீரன்பட்டி வழியாக சிவகாசிக்கு திருப்பி விடப்பட்டன. எம்.புதுப்பட்டி கூடமுடையார் அய்யனார் கோயில் ஆற்றில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதே போன்று ஆனைக்குட்டம் அணை திறந்து விடப்பட்டதால் சோரம்பட்டி-முத்துலிங்கபுரம் வடமலாபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post சாலையில் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம் சிவகாசி-எம்.புதுப்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Sivakasi-M.Budhupatti road ,Sivakasi ,Sivakasi-M. Pudhupatti road ,Dinakaran ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி