×

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை வேண்டும்: கலெக்டரிடம் மனு

 

ராமநாதபுரம், டிச.20: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்புல்லானி ஒன்றியம், குத்துக்கல் வலசை கிராம செயலாளர் தங்கராஜ் தலைமையிலான கிராமமக்கள் மனு அளித்தனர். இது குறித்து கிராமமக்கள் கூறும்போது, திருப்புல்லானி ஒன்றியம், குத்துக்கல்வலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் கணித ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர் ஆகியோர் மாணவர்களை தாக்கி வருகின்றனர்.

இதில் கணித ஆசிரியர் மீது இரண்டு முறை திருப்புல்லானி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலமுறை பள்ளி தலைமை ஆசிரியையிடமும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் ஆசிரியர் தாக்கியதில் மாணவர்கள் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். எனவே மாணவர்களுக்கு ரத்தக்காயம் ஏற்படுத்தும் அளவிற்கு அடித்து வரும் கணித ஆசிரியர், சிறப்பு ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆசிரியர்கள் மீது நடவடிக்கை வேண்டும்: கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,People's Grievance Redressal Day ,Tirupullani Union ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை...