×

பாரம்பரிய சாகுபடி முறை; விவசாயிகள் குழு பயிற்சி

 

ஊட்டி, டிச.20: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பாரம்பரிய சாகுபடி முறைகள் குறித்த விவசாயிகள் குழு பயிற்சி சாமில்திட்டு கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை வகித்து, அங்கக வேளாண்மையின் இன்றியமையாமை குறித்தும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க தோட்டக்கலை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார்.

ஊர் தலைவர் ஆண்டி கவுடர் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் அங்கக சான்றளிப்பு பதிவு செய்யும் முறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். விவசாயி போஜன் தேயிலை சாகுபடியில் விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து பேசினார். முன்னதாக செவணன் வரவேற்றார். இதில் 30-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் முடிவில் ஹாலன் நன்றி கூறினார்.

The post பாரம்பரிய சாகுபடி முறை; விவசாயிகள் குழு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Parambarakath Krishi Vikas Yojana ,Nilgiri District Kotagiri District Horticulture Hill Crops Department… ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...