×

குட்கா விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல்

இளம்பிள்ளை, டிச. 20: இளம்பிள்ளை அடுத்த இடங்கண சாலை பகுதியில் பெட்டிக்கடைகள், டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலலை அடுத்து, மகுடஞ்சாவடி உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் இடங்கணசாலை குடோன் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர். இப்பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி ஜவுளித்தொழில், தறிக்கூடங்களில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளில் பதுக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. மளிகை கடையில் குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடையை பூட்டி சீல் வைத்தனர்.

The post குட்கா விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Yumupillai ,Tamil Nadu government ,Itangana Road ,Dinakaran ,
× RELATED போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு...