×

ரெட்டிபாளையம் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: குருவன்மேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் உயரமான தரைபாலம் போல், 15 அடி உயரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என ரெட்டிபாளையம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் – பாலூர் இடையே ரெட்டிபாளையம் பகுதியில் இருந்த தரைபாலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கனமழை பெய்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து, பொது போக்குவரத்து முற்றிலும் தடையானதை தொடர்ந்து, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலை துறை சார்பில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைபாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்ட துவங்கப்பட்டது.

தற்போது, முழுமையாக பணிகள் நிறைவுபெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்த தொடர் கனமழை வெள்ளத்தால் ரெட்டிபாளையம் தரைபாலம் முற்றிலும் வெள்ளம் சூழ்ந்து பொது போக்குவரத்து தடைபட்டது. இதனால் கொளத்தூர், பாலூர், ரெட்டிபாளையம், குருவன்மேடு, கொளத்தாஞ்சேரி, கொங்கனாஞ்சேரி, வில்லியம்பாக்கம், தேவனூர், மேலச்சேரி உள்ள 20 கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதில், ரெட்டிபாளையம் தரைபாலம் வெள்ளத்தில் மூழ்கினால், 7 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியதற்கு பதிலாக, 20 கிலோ மீட்டர் கூடுதலாக சுற்றி பயணிக்க வேண்டிய நிலை உருவாகியது.

மிக்ஜாம் புயல் தொடர் கனமழைக்கு பிறகு ரெட்டிபாளையம் தரைபால பணிகளை முழுவதுமாக நிறைவுபெற்று, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ரெட்டிபாளையம் அருகே குருவன்மேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் தரைபாலம் உயரமாக கட்டி வருகின்றனர். மழை வெள்ளம் சூழ்ந்தால் போக்குவரத்து தடைப்படாது. ஆனால், ரெட்டிபாளையம் தரைபாலத்தை ஏற்கனவே இருந்த அதே 5 அடி உயத்தில் மட்டுமே தரைபாலத்தை புதிதாக 50 மீட்டருக்கு குறைவாக கட்டியுள்ளனர். ரெட்டிபாளையம் கிராம மக்கள் 15 அடிக்கு அதிகமான உயரத்தில் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ரெட்டிபாளையம் தரைபாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் புதிதாக ரெட்டிபாளையம் பகுதியில் தரைப்பாலம் கட்டி பயன்பாட்டிற்கு வந்து எந்த பயனும் இல்லை என புகார் தெரிவிக்கின்றனர். அடுத்தாண்டு மழை வெள்ளத்தில் தரைபாலம் அடித்து செல்லப்படலாம் அல்லது பொது போக்குவரத்து மீண்டும் தடைப்படும்.

எனவே அடுத்த, ஆண்டு மழை வெள்ளத்திற்க்கு முன்பாக ரெட்டிபாளையம் பகுதியில் 5 அடி உயரத்தில் மட்டுமே கட்டியுள்ள தரைபாலத்தை 15 அடி உயரத்தில் கட்டி முடிக்க வேண்டும். இல்லை என்றால் மிக விரைவில் ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்க்கு எதிராகவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் மிக பெரிய போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக நாம் செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.

The post ரெட்டிபாளையம் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Redtipalayam ,Chengalpattu ,Guruvanmedu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அருகே அண்ணன் மகனை கொன்ற சித்தப்பா கைது..!!