×

பயங்கர நிலநடுக்கம் சீனாவில் 116 பேர் பலி: 300க்கும் மேற்பட்டோர் காயம்

பெய்ஜிங்: வடமேற்கு சீனாவில் மலை பிராந்தியத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள்,கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன. நள்ளிரவிலும் பலர் உறக்கத்தில் இருந்து விழித்து அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். மின்விநியோகம் மற்றும் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உள்கட்டமைப்புக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது.சாலா கவுன்டியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் லியுகோ நகரத்தை மையமாக கொண்டு 10கிமீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சம்பவங்களில் கான்சு மாகாணத்தில் 105 பேரும், கிங்காயில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 397 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து 32 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள் உணரப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மாகாண தீயணைப்பு துறை, மீட்பு பிரிவினர் 580 மீட்பு பணியாளர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறியவதற்காக 12 மோப்ப நாய்கள், 10,000 உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post பயங்கர நிலநடுக்கம் சீனாவில் 116 பேர் பலி: 300க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,northwest China ,Dinakaran ,
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...