×

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் களமிறங்கி வேலை பார்க்கிறோம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீட்பு பணிகளை மேற்கொண்டார்.பாளையங்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பிரதான சாலையில் இருந்து முழங்கால் அளவு நீரில் நடந்து சென்று அரசு மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி பார்வையிட்டார்.பேருந்து நிலையத்தில், முகாமில் தங்கி இருந்த மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவு வழங்கினார்.மேலும் அவர் நிவாரண முகாமில் உள்ள மக்களை சந்தித்து பேசி, தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதியளித்தார்.உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கீதா ஜீவன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக பெய்த கனமழை காரணத்தால், தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிட்டு, தண்ணீரை அப்புறப்புப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன்.வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் களமிறங்கி வேலை பார்த்து வருகின்றோம். எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை பெய்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் பாதித்துள்ளன. பாதித்த பகுதிகளில் இயன்றளவு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,”என்றார்.

The post வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் களமிறங்கி வேலை பார்க்கிறோம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Thoothukudi ,Udhayanidhi Stalin ,Palayangottai Road ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...