×

வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கித் தவித்த 100 பேர் பத்திரமாக மீட்பு

நெல்லை: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து100 பேரை தேசிய போரிடர் மீட்புப் படையினர் 3 கி.மீ. தூரம் உள்ள வெள்ளூருக்கு அழைத்துச் செல்கின்றனர். வாஞ்சி-மணியாச்சி ரயில் நிலையத்தில் செல்ல தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூரில் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைலயத்தில் இருந்து 100 ரயில் பயணிகள் மீட்கப்பட்டனர். 100 பேரும் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூரை அடைந்த பிறகு பேருந்துகளில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர் என தகவல் தெரிவித்துள்ளனர். வாஞ்சி மணியாச்சியில் இருந்து 100 பேரும் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ரயிலில் சிக்கியுள்ள பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த நான்கு மாவட்டங்களும் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து100 பேரை தேசிய போரிடர் மீட்புப் படையினர் 3 கி.மீ. தூரம் உள்ள வெள்ளூருக்கு அழைத்துச் செல்கின்றனர். வாஞ்சி-மணியாச்சி ரயில் நிலையத்தில் செல்ல தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூரில் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலைலயத்தில் இருந்து 100 ரயில் பயணிகள் மீட்கப்பட்டனர். 100 பேரும் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூரை அடைந்த பிறகு பேருந்துகளில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர் என தகவல் தெரிவித்துள்ளனர். வாஞ்சி மணியாச்சியில் இருந்து 100 பேரும் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

 

The post வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கித் தவித்த 100 பேர் பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Srivaikundam railway ,National Disaster Response Force ,Vellore ,Srivaikunda ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...