×

திமுக கொடியேற்று விழா

திருச்செங்கோடு, டிச.19: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுராசெந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வருகை தரவுள்ளனர். காலை 8 மணிக்கு திருச்செங்கோடு சந்தைபேட்டை குளோபல் பள்ளி அருகிலும், 10 மணியளவில் எலச்சிபாளையம் பேருந்து நிலையம் அருகிலும், 60 அடி கொடிக்கம்பத்தில் திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் திமுக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து, நாளை(20ம்தேதி) நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாலை 4 மணிக்கு திருச்செங்கோடு-வேலூர் ரோட்டில் மாவட்ட அலுவலகத்தில், தளபதியார் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள இளைஞரணி 2வது மாநில மாநாட்டில் நாமக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றிகரமாக நடத்திடும் வகையில் நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post திமுக கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Tags : DMK ,Tiruchengode ,Namakkal West District ,Madurasend ,DMK Flag Ceremony ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு நவீன படுக்கை வழங்கல்