×

சிறுவன் கடத்தி கொலை: ஆந்திர காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா கிராமத்தில் நான்காம் வகுப்பு பள்ளி மாணவன் கடத்தப்பட்டு மாயமான சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதே கிராமத்தை சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் சுரேஷ் – சிந்துமதி தம்பதியர். இவர்களது மகன் அனீஸ்(8) இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போனது தெரியவந்தது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுவன் காணாமல் போன நிலையில் போலீசார் சிறுவனை மீட்பதில் அலட்சியம் காட்டுவதாக கூறிய அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி காவல் சரக எல்லைக்குட்பட்ட பாதிரிவேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சிறுவனை அழைத்துச் சென்ற அதே பகுதியை சேர்ந்த ரேகாவை(30) போலீஸ் பாதிரிவேடு காவல் நிலைய போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் இரண்டு தனிப்படைகளை அமைத்து ஆந்திர மாநிலம் வருதாயபாளையம் பகுதியில் தேடி வந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் வருதையபாளையம் காட்டுப்பகுதியில் சிறுவன் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

அதன் பின்பு போலீசார் உடலை கைப்பற்றி காளாஸ்திரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பல்லவாடா கிராமத்தில் பரவியதால் கிராமமே போர்க்களம் போல் காணப்பட்டதோடு பெற்றோர்கள் கதறி அழும் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், விசாரணை வளைத்தில் இருந்த ரேகாவை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பணத்துக்காக இந்த கொலை நடந்தததா? அல்லது முன்விரோதம் காரணமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் மேலும் சில நபர்கள் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post சிறுவன் கடத்தி கொலை: ஆந்திர காட்டுப்பகுதியில் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Andhra forest ,CHENNAI ,Pallawada ,Kummidipoondi ,Thiruvallur… ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...