×

எருமாடு பகுதியில் டயாலிஸ் சென்டர் துவக்க விழா

பந்தலூர்,டிச.19: பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் டயாலிஸ் சென்டர் துவக்க அறிவிப்பு விழா நடைப்பெற்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் பலர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸ் செய்வதற்கு டயாலிஸ் மையங்கள் இல்லாமல் கூடலூர் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். ஏழை எளிய சிறுநீரக நோயாளிகள் இதற்காக அதிகளவில் செலவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் எருமாடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் எருமாடு ஜனகீய சமிதி என்கிற அமைப்பு சார்பில் டயாலிஸ் சென்டர் துவக்க விழா நேற்று துவங்கியது.

நிகழ்ச்சிக்கு கனிவு பாலியேட்டீவு அமைப்பின் தாளாளர் லட்சுமிக்குட்டி டீச்சர் தலைமை வகித்தார்.கன்வீனர் பேபி மாஸ்டர் வரவேற்றார்.மபார் மறைமாவட்ட அருட்தந்தை கீவர்கீஸ் மோர் முன்னிலை வகித்தார்.சுல்தான்பத்தேரி சாந்தகிரி ஆசிரம தலைவி தபஸ்வினி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நீலகிரி கல்லூரியின் நிர்வாக இயக்குனர் ராஷித் கஸாலி சிறப்புரையாற்றினார். ஜனகீய சமிதி தலைவர் அப்துல் மஜீத்,கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன்,முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி,மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அனீபா மாஸ்டர்,சேரங்கோடு ஊராட்சிமன்ற துணை தலைவர் சந்திரபோஸ்,மணி மாஸ்டர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

The post எருமாடு பகுதியில் டயாலிஸ் சென்டர் துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : Dialysis ,Center ,Erumadu ,Pandalur ,Nilgiri District ,Pandalur Circle ,Dialysis Center Inauguration Ceremony ,Dinakaran ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...