×

தட்சிணாமூர்த்தி மடத்தில் சனிப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது

ஊட்டி,டிச.19: ஊட்டியில் உள்ள தட்சிணாமூர்த்தி திருமடத்தில் வரும் 20ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. ஆண்டு தோறும் சனிப்பெயர்ச்சி பெருவிழாவை முன்னிட்டு ஊட்டி அருகேயுளள காந்தல் காசிவிஷ்வநாதர் கோயில் உள்ள சனிபகவான் கோயிலில் சிறப்பாக சனி பெயர்ச்சி விழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சனிபெயர்ச்சி விழா நாளை(20ம்தேதி) மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. அன்றையதினம் சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு இடம் பெயர்கிறார்.

கயிலை புனிதர் தவத்திரு மருதாசல அடிகளார் முன்னிலையில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடக்கிறது. முன்னதாக மாலை 3 மணிக்கு முத்து பிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. 3.30 மணிக்கு சனி பெயர்ச்சி சிறப்பு வேள்வி வழிபாடு நடக்கிறது.மாலை 5.20 மணிக்கு பேரொளி வழிபாடு நடக்கிறது. எனவே, பொதுமக்கள் இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்துக் கொண்டு பயன் அடைய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post தட்சிணாமூர்த்தி மடத்தில் சனிப்பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Shani Pearchi ceremony ,Dakshinamurthy Mutt ,Ooty ,Shanipairchi ceremony ,Dakshinamurthy Thirumadam ,Saturn transition festival ,Saturn ,transition ceremony ,Dakshinamurthy Math ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...