×

காரை. மீனவர்கள் 14 பேர் மீண்டும் சிறைபிடிப்பு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ரங்கசாமி கடிதம்

புதுச்சேரி, டிச. 19: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மீனவர்கள் 14 பேரை விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகத்திலிருந்து சிவசங்கர் என்பவரது விசைப்படகில் காரைக்காலை சேர்ந்த 11 பேரும், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 14 பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இதற்கிடையே நடுக்கடலில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவும், காற்றின் வேகம் காரணமாகவும் விசைப்படகை இயக்க முடியாததால் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் 14 மீனவர்களையும் படகையும் சிறை பிடித்தனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையே ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய கோரி அவர்களது உறவினர்கள் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து கோட்டுச்சேரி கிராம பஞ்சாயத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் கூறுகையில், மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மழை மற்றும் காற்றின் வேகத்தால் திசை மாறி இலங்கை எல்லைக்கு சென்றுவிட்டனர். ஆனால் இதனை புரிந்து கொள்ளமால் இலங்கை கடற்படை அவர்களை கைது செய்துள்ளது. எனவே படகு மற்றும் அவர்களை பத்திரமாக மீட்க வேண்டுமென முதல்வர், உள்துறை அமைச்சரை சந்தித்து மனுக்கொடுத்துள்ளோம் என்றனர்.

The post காரை. மீனவர்கள் 14 பேர் மீண்டும் சிறைபிடிப்பு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ரங்கசாமி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Rangasamy ,Minister of State ,Puducherry ,Karaikal ,Nagapattinam ,Sri Lankan Navy ,Karai ,Minister ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் உடல் பருமன்...