×

நிவாரணம் வழங்க கோரி விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

செங்கல்பட்டு: வெள்ள நிவாரணம் வழங்காததால் திம்மாவரம் விஏஓ அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். தமிழகத்தில் கடந்த 4ம்தேதி மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் மகாலட்சுமி நகர் பகுதியில் சாலைகளிலும், வீடுகளிலும் இடுப்பளவு தண்ணீர் புகுந்து கடுமையான பாதிப்புக்குள்ளாகி வந்தனர். நான்கைந்து நாட்கள் வெளியில் வரமுடியால் அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் கடுமையான பாதிப்பு ஏற்ப்பட்டது. எங்களுக்கு எந்த அதிகாரியும் அரசியல் கட்சி பிரமுகர்களும் எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. எங்கள் படகு மூலம்தான் காப்பாற்றப்பட்டோம். ஆண்டு தோறும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகிறோம். தமிழக அரசு பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் தாம்பரம் உள்ளிட்ட நான்கு வட்டங்களுக்கு மட்டுமே நிவாரணம் அறிவித்துள்ளது. நாங்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு ஏன் நிவாரணம் வழங்குவது குறித்து அறிவிப்பு வரவில்லை. எங்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என கிராம நிர்வாக அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு வட்டாட்சியர் ராஜலட்சுமி முற்றுகையிட்ட பெண்களிடம் பேசினார். பின்னர், அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு இதுகுறித்து கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலைமறியிலில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் கூறினர்.

The post நிவாரணம் வழங்க கோரி விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : VAO ,Chengalpattu ,Thimmavaram ,Mikjam ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!