×

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கல்லூரி வளாகத்தில் தங்கிக் கொள்ளலாம்: நேசக்கரம் நீட்டிய பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மிக கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாளையங்கோட்டை புனித சேவியர்ஸ் கல்லூரி உதவிக் கரம் நீட்டியுள்ளது. நேற்று பெய்த கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. ஏறத்தாழ அனைத்து இடங்களும் நீரால் சூழப்பட்டுள்ளது. அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் 22 முகாம்களில் நெல்லையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 4500 பேர் இந்த முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும், மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கல்லூரி வளாகத்தில் தங்கிக் கொள்ளலாம் என பாளையங்கோட்டை புனித சேவியர்ஸ் கல்லூரி அறிவித்துள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், மாணவர்கள் தங்கள் கல்லூரியில் தங்கிக் கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கல்லூரி வளாகத்தில் தங்கிக் கொள்ளலாம்: நேசக்கரம் நீட்டிய பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி!! appeared first on Dinakaran.

Tags : Palayamgottai St. Saviour's College ,Nellai ,Nellai district ,Palayangottai St. Saviour's College ,Dinakaran ,
× RELATED களக்காடு பகுதியில் முக்கிய...