×

நேற்றிரவு 8 மணி முதல் பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம்: தாவூத் இப்ராகிம் மரணமா?


லாகூர்: நேற்றிரவு முதல் பாகிஸ்தானில் இணைய சேவை முடங்கியதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே தாவூத் இப்ராகிம் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத்தில் நேற்றிரவு 8 மணிக்குப் பிறகு இணைய சேவைகள் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. சமூக ஊடக தளங்களை அணுக முடியாமல் பயனர்கள் சிரமப்பட்டனர். நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை விஷம் வைத்து கொன்று விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானின் காணொலி கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. அதனால் இணைய சேவை முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பிடிஏ) இதுதொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post நேற்றிரவு 8 மணி முதல் பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம்: தாவூத் இப்ராகிம் மரணமா? appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Dawood Ibrahim ,LAHORE ,Dinakaran ,
× RELATED அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக...