×

தென்காசியில் வெளுத்து வாங்கும் கனமழை: 10,000 ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின… விவசாயிகள் வேதனை..!!

தென்காசி: தென்காசியில் வெளுத்து வாங்கக்கூடிய கனமழையால் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், குமரி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 36 இடங்களில் அதிகனமழை பதிவாகி உள்ளது. நெல்லையை ஒட்டியுள்ள தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இன்றைய தினமும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. குற்றாலத்தில் அதிக நீர் பெருக்கெடுத்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், தென்காசி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அம்மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்து நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. சுமார் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. சாலையெங்கும் தண்ணீர், நிலமெங்கும் நீரால் சூழப்பட்டிருக்கும் சூழலில் பயிர்கள் வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

The post தென்காசியில் வெளுத்து வாங்கும் கனமழை: 10,000 ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின… விவசாயிகள் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags : South Kashmir ,Tenkasi ,Dinakaran ,
× RELATED மொழி, கல்வி, நிதி உரிமைகளை மீட்டெடுக்க...