×

மொழி, கல்வி, நிதி உரிமைகளை மீட்டெடுக்க இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்

*தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தென்காசி : மொழி, கல்வி, நிதி உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தென்காசி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தென்காசி புதிய பஸ்நிலையத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:

தென்காசி தொகுதி வாக்குப்பதிவு கருவியில் மூன்றாவதாக உள்ள பட்டனில் ராணி ஸ்ரீகுமார் பெயர் இருக்கும். அதற்கு நேராக உதயசூரியன் சின்னம் இருக்கும். அந்த பட்டனை அழுத்தி நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு.

தொடர்ந்து மக்களுக்கு வேட்டு வைத்து வரும் அவரை ஓடஓட விரட்ட நல்ல ஒருவாய்ப்பு. கடந்த தேர்தலில் தனுஷ்குமார் 1,21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராணி ஸ்ரீகுமார் வெற்றி பெற வேண்டும். கடந்த முறை அனைவரும் ஒன்றாக சேர்ந்து தேர்தலில் எதிர்த்து நின்றார்கள்.‌ இம்முறை தனித்தனியாக பிரிந்திருக்கிறார்கள். எனவே 3 லட்சம் வாக்குகளுக்கு குறையாமல் வெற்றி பெற வேண்டும்.

தென்காசி தொகுதியில் கடந்த 3ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2014ல் ரூ.450 ஆக இருந்த கேஸ் விலை 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் ரூ.1200 ஆகிவிட்டது. தற்போது தேர்தலுக்காக நூறு ரூபாய் குறைத்து இருக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.500க்கு சிலிண்டர் தருவதாகவும், ரூ.75க்கு ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.65க்கு ஒரு லிட்டர் டீசல் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி அகற்றப்படும். ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக நெல்லையையும், சங்கரன்கோவிலையும் இணைக்கும் வகையில் ரயில்பாதை திட்டம் அமைக்கப்படும். நெல்லை-தென்காசி வழியாக செல்லும் ரயில்களை கடையத்தில் நிற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவிட் சமயத்தில் பிரதமர் மோடி 6 மாதமாக வெளியே வரவில்லை. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோவையில் கோவிட் பாதித்த மக்களை மருத்துவமனையில் சென்று சந்தித்தார். ரூ.4 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கினார். ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்தாக மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிவித்தார். தென்காசி மாவட்டத்தில் மட்டும் 5கோடி பெண்கள் பயன்பெற்றுள்ளனர். பெட்ரோல் விலை ரூ.3 குறைத்தார்.

புதுமை பெண்கள் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரி பயிலும் மாணவியருக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கினார். 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் 22,000 பேர் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தை கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் பின்பற்றுகின்றனர்.

மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. மொத்தம் 1.60 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனை பரிசீலனை செய்து 1.18 கோடி மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது. மீதமுள்ள தகுதியான மனுக்கள் பரிசீலித்து விரைவில் வழங்கப்படும். கிட்டத்தட்ட 70% மகளிருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரை பெயர் சொல்லி கூப்பிடாதீர்கள். மிஸ்டர் 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும். நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் ஒன்றிய அரசு நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பித் தருகிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு 3ரூபாயும், பீகாருக்கு 7ரூபாயும் வழங்குகிறது. மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமை ஆகியவற்றை நாம் மீட்டெடுக்க இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், நகர செயலாளர் சாதிர், பழனிநாடார் எம்எல்ஏ, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட அவைத்தலைவர் மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, மாவட்ட பொருளாளர் ஷெரீப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகச்சாமி, சேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை ரஹீம், ராஜேஸ்வரன், சாமித்துரை, தமிழ்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, ஜெயக்குமார், அன்பழகன், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, முத்தையா, பண்டாரம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமையா,

வக்கீல்கள் வேலுச்சாமி, முருகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி போஸ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞரணி கிருஷ்ணராஜா, ரமேஷ், கோமதிநாயகம், இஞ்சி இஸ்மாயில், கே.என்.எல்.சுப்பையா, ஷமீம்பானு, அணி துணை அமைப்பாளர்கள் அப்துல்ரஹீம், சிவக்குமார், கிருஷ்ணராஜ், கரிசல் வேல்சாமி, கருப்பணன், பாலாமணி, ராஜேந்திரன், தங்கபாண்டியன், ராமராஜ், மோகன்ராஜ், சண்முகநாதன், ஜீவானந்தம், ஸ்ரீதர், மாரியப்பன் கருணாநிதி, சுரேஷ், பேரூராட்சி தலைவர்கள் ஆய்க்குடி சுந்தர்ராஜன், வேணி, சின்னத்தாய், சீதாலெட்சுமி, குற்றாலம் பொருளாளர் சுரேஷ், ஊராட்சி தலைவர்கள் வேலுச்சாமி, சத்யராஜ், மாவட்ட பிரதிநிதிகள் கிட்டுபாண்டியன், சுந்தரம், செல்வம், ரவி, தென்காசி நகர நிர்வாகிகள் ராம்துரை,

பால்ராஜ், சேக்பரீத், பாலசுப்பிரமணியன், மைதீன்பிச்சை, வேல்ஐயப்பன், கல்யாணி, சங்கர்ராஜன், அறங்காவலர் இசக்கிரவி, சன்ராஜா, மைதீன், சபரிசங்கர், முகமதுரபி, வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், நகர தலைவர் மாடசாமி, பொருளாளர் ஈஸ்வரன், மதிமுக ராமஉதயசூரியன், வெங்கடேஷ்வரன், கார்த்திக், மார்க்சிஸ்ட் முத்துப்பாண்டியன், மாரியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் இசக்கித்துரை, விசிக பண்பொழி செல்வம், சித்திக், வர்க்கீஸ், சந்திரன், ஆதித்தமிழர் பேரவை தென்தமிழரசு, தமிழ்புலிகள் கடையநல்லூர் சந்திரசேகர், முஸ்லிம்லீக் அப்துல்அஜீஸ், செய்யதுபட்டாணி, முகமதுஅலி, அபுபக்கர், மமக யாக்கூப், சலீம், திராவிடர் தமிழர் கட்சி கரு.வீரபாண்டியன், மக்கள் நீதி மய்யம் அய்யாசாமி, மஜக அஜ்மீர், வாழ்வுரிமை கட்சி மைதீன், கணேசன், ஆதி தமிழர் கட்சி பொதிகைஆதவன், பார்வர்டுபிளாக் சுப்பிரமணியன் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திராவிட மாடலுக்கும் பாஜ மாடலுக்கும் வித்தியாசம்

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘கடந்த தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். ஒரேஒரு செங்கல் மட்டும் வைத்து துவக்கினார். அந்த செங்கலையும் நான் எடுத்து வந்துவிட்டேன்.‌ இதுதான் அந்த செங்கல். மருத்துவமனையை கட்டுங்கள், இந்த செங்கலை தந்து விடுகிறேன்.‌ அதன்பிறகு 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் கட்டவில்லை. பல கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டியுள்ளார். ஒரு வருடம் என்று கூறி பத்தே மாதத்தில் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசு. செங்கலுக்கும் கட்டிடத்திற்கும் உள்ள வித்தியாசம் தான், திராவிட மாடலுக்கும் பாஜ மாடலுக்கும் உள்ள வித்தியாசம்’ என்றார்.

தமிழகத்திற்கே துரோகம்

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் யார் காலிலும் விழுந்ததில்லை. இப்படத்தில் உள்ளது யாரென்று உங்களுக்கு தெரியும். தவழ்ந்து போவது யார், காலில் விழுந்தது யார் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும். 2நாட்களுக்கு முன்பு எடப்பாடிக்கு சென்றிருந்தேன். அந்த ஊர்காரர்கள் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறாதீர்கள். எங்களுக்கு அசிங்கமாக உள்ளது என்று தெரிவித்தனர். பாதம் தாங்கி பழனிச்சாமி என்று தான் அவரை கூறவேண்டும். சசிகலா காலை பிடித்து முதல்வராகி விட்டு அவருக்கே துரோகம் செய்தார். யார் இந்த சசிகலா என்று கேட்டார். சசிகலாவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் செய்தார்’ என்றார்.

The post மொழி, கல்வி, நிதி உரிமைகளை மீட்டெடுக்க இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : India ,Udhayanidhi Stalin ,South Kashmir ,DMK ,Tenkasi Lok Sabha ,Dinakaran ,
× RELATED 10 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த மோடி:...