×

நெல்லை, தூத்துக்குடியில் வானம் வெடித்து சிதறியது … கடந்த 24 மணி நேரத்தில் அதிகனமழை பதிவாகியுள்ள இடங்கள்!!

மதுரை: குமரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நெல்லையில் 31 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை கொட்டி வருகிறது. தூத்துக்குடியில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, குமரி, நாகர்கோயில், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகனமழை பதிவாகியுள்ள இடங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு,

“தூத்துக்குடி (செண்டி மீட்டரில்)

*காயல்பட்டினம் – 95
* திருச்செந்தூர் – 69
*பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீ வைகுண்டம் -62
*திருச்செந்தூர் AWS – 61
*ஒட்டபத்திரம் – 37
*கடம்பூர் – 37
*குலசேகரன்பட்டினம் – 33
*கயத்தாறு -27
*விளாத்திகுளம் – 26
*வைப்பார் – 22
*கழுகுமலை – 19
*கோவில்பட்டி – 53
*மணியாச்சி – 42
*வேதநத்தம் – 30

திருநெல்வேலி (செண்டி மீட்டரில்)

*மூலக்கரைப்பட்டி – 61
*நாங்குநேரி – 33
*மாஞ்சோலை – 55
*ஊத்து – 50
*நாலுமுக்கு – 47
*பாளையங்கோட்டை – 44
*அம்பாசமுத்திரம் – 43
*சேரன்மகாதேவி – 41
*கன்னட அணைக்கட்டு – 41
*காக்காச்சி – 36
*நம்பியார் அணை – 36
*பாபநாசம் – 35
*மணிமுத்தாறு – 33
*களக்காடு – 32
*திருநெல்வேலி – 31
*கொடுமுடியாறு அணை – 30
*சேர்வலர் அணை – 27
*ராதாபுரம் – 27

கன்னியாகுமரி (செண்டி மீட்டரில்)

*நாகர்கோவில் – 18
*கொட்டாரம் – 18
*மையிலாடி – 30

விருதுநகர் (செண்டி மீட்டரில்)

*சாத்தூர் – 20
*வெம்பக்கோட்டை – 18

தென்காசி (செண்டி மீட்டரில்)

*குண்டர் அணை – 51
*செங்கோட்டை – 30
*கருப்பநதி அணை – 30
*கடனா அணை – 22
* ஆய்க்குடி – 21
*ராமநதி அணைப் பிரிவு – 21
*தென்காசி – 17
*சிவகிரி – 16
*சங்கரன்கோவில் – 8
*அடவிநயினார் அணை – 8

The post நெல்லை, தூத்துக்குடியில் வானம் வெடித்து சிதறியது … கடந்த 24 மணி நேரத்தில் அதிகனமழை பதிவாகியுள்ள இடங்கள்!! appeared first on Dinakaran.

Tags : Nella, Tuthukudi ,MADURAI ,TUTHUKUDI ,SEA ,NEAR ,KUMARI ,Nella, Thutukudi ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி